சூஃபியிசம் என்றால் என்ன? – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)

Posted on

இந்த நூலின் தலைப்பே ஒரு கேள்வியாக அமைந்துள்ளது. மேற்குலகில் அந்தக் கேள்விக்கு அண்மைக் காலத்தில் ஒருவித போலித்தனமான, சந்தேகத்திற்குரிய சில பதில்கள் தரப்பட்டுள்ளன. மட்டுமின்றி, சூஃபியிசம் குறித்த ஆர்வமும் அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, ஒரு நம்பத்தகுந்த அறிமுக நூலின் தேவை மென்மேலும் அதிகரித்துள்ளது. அத்தகு அறிமுக நூலின் தேவையை இந்த நூல் பூர்த்தி செய்கிறது.