நிராகரிப்புக்கும் தீவிரவாதத்துக்கும் மத்தியில் இஸ்லாமிய எழுச்சி – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி

Posted on
பக். 226 ₹ 100

முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம், இஸ்லா மியச் சிந்தனை என்பன பற்றிய நமது கரிசனையும், முஸ்லிம் இளை ஞர்கள் மீது நாம் கொண்டுள்ள அக்கறையுமே இந்த நூலை நாம் தேர்ந்து கொண்டமைக்குரிய காரணங்கள். இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை (அகீதா), சட்டவியல் (ஃபிக்ஹ்) ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த வரான இந்த நூலின் ஆசிரியர் டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி, தஃவா துறையில் ஆழ்ந்த அனுபவமும் பரிச்சயமும் பெற்றவர்.

மானிட சமூகத்தைச் சத்தியம், நீதி, முன்னேற்றம் என்பன நோக்கி வழி நடாத்திச் செல்லும் மிகப் பெரியதொரு பொறுப்பினை அல்லாஹ் இந்த சமூகத்தின் மீது சுமத்தியுள்ளான். கடந்த சில நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் பலவிதப் போராட்டங்களுக்கு உள்ளாகியும், உட்படுத் தப்பட்டும் வந்துள்ளமை காரணமாக இந்தப் பொறுப்பினைச் சரிவர நிறைவேற்ற முடியாது போயுள்ளமை வருந்தத்தக்கது. அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மகத்தான மானிட, பொருள் வளங்களை அளித் துள்ளான். என்றாலும் கூட, சமகால நிகழ்வுகளை அமைதி, மானிட அபிவிருத்தி என்பன நோக்கிக் கொண்டு செல்ல அந்த வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவர்களிடம் இல்லை.

அசாதாரணமான புறத் தாக்கங்கள், உள்ளூர அரித்துச் செல்லும் விரக்தி, நவீன உலகச்சூழல் விடுக்கும் சவால்கள் முதலியன முஸ்லிம் இளைஞர்களது பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் தீவிரப் பரிசோதனைகளுக்குள்ளாக்கி வருகின்றன. மகத்துவம் மிக்க இஸ் லாமிய நோக்குகளும், இலட்சியங்களும் பார்வையிலிருந்து சிறுகச் சிறுக மங்கிச் செல்கின்றன. முஸ்லிம் சமூகத்தின் சமூக, பொருளா தார, அரசியல் வாழ்வு சிதைந்து, உறைந்து போயுள்ளது. முஸ்லிம் இளைஞர்கள் இஸ்லாத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், அதனால் பெரு மையும் கொண்டோராயிருந்தாலும் கூட அனுபவம், அறிவு என்பன வற்றை மட்டுப்படுத்தப்பட்ட ஓர் அளவிலேயே அவர்கள் கொண் டுள்ளமை காரணமாக முன் யோசனையில்லா அசட்டு துணிச்சலான செயல்களையும் தீவிர நடைமுறைகளையும் கைக்கொள்ள முனை கின்றனர். நெறி பிறழ்ந்த, அற்ப, குறுகிய நோக்குடைய சுலோகங் களினாலும், முழக்கங்களினாலும் கவரப்பட்டுவிடும் இந்த இளை ஞர்கள் அடையும் துயரம், சமூகத்தின் துயரங்களையும் அவஸ்தை களையும் பெருக்கி வைப்பனவாகி விடுகின்றன. இதனால் சமூகத்தின் வலிமையும் வளங்களும் வீண் விரயங்களுக்குள்ளாகின்றன. இஸ் லாமிய தலைமைத்துவமும் அழிவுக்குள்ளாகி வருகின்றது.

டாக்டர் கர்ளாவி புகழ் பெற்ற ஓர் அழைப்பாளர்; அறிஞர். அவர் எழுதியுள்ள இந்த நூல், சமூகத்தின் வரலாற்றினதும் நெறியினதும் பூரணச் சரிதையை இளைஞர்கள் சரிவரக் கண்டு கொள்ளவும் கிரகித்துக் கொள்ளவும் துணை செய்கின்றது; குர்ஆன், சுன்னாஹ் என்பன குறித்துத் தெளிவான புரிந்துணர்வை அமைத்துத் தருகின்றது. அவற்றை முஸ்லிம் இளைஞர்கள் கற்று, அவற்றிலிருந்து பூரணப் பயன்பெற்றுக் கொள்ளும் வகையில் ஆக்கப்பூர்வமான அணுகு முறையொன்றை அறிமுகம் செய்கின்றது. முஸ்லிம் இளைஞர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ள பிரச்சினைகளுக்கான காரணங்களை முறையாகவும், தெளிவாகவும் ஆராய்வதற்குத் துணை செய்யும் இந்த ஆக்கம், தக்க தீர்வுகள் காண, முஸ்லிம்கள் கையாள வேண்டி யுள்ள இஸ்லாமிய வழிமுறைகளையும் காட்டித் தருகின்றது. முஸ் லிம் இளைஞர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் அனைவருமே இந் நூலிலிருந்து நிச்சயம் பெரும் பயன் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *