சஈது நூர்ஸியும் ரிசாலா-யே நூரும் – டாக்டர் ஹமீது அல்கர்

Posted on
பக். 48 ₹ 20

துருக்கியின் வருங்காலத்தில் நிகழும் எவ்வொரு இஸ்லாமிய ஆளுகையின் மறுவுரைப்பிலும் இவர்கள், சமய உணர்வு மற்றும் இலட்சியத் துடிப்பிற்கான கவனக்குவிப்பு வழங்குவதில் இன்றி யமையாத பங்கு ஆற்றியவர்களாகப் பார்க்கப்படுவார்கள். வரலாற் றுப் போக்கு குறித்த ஹமீத் அல்கரின் கணிப்பு மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன் இஸ்லாமிய கிலாஃபத் பீடம் சரிந்து இஸ்லாமிய சக்தியும் குன்றிப்போன துருக்கியில் இன்று மீண்டும் இஸ்லாமிய உயர்வு அரங்கேறியுள்ளது. துருக்கி ஒரு சுற்று வட்டமடித்து, முதலில் இருந்த இடத்திற்கே மீண்டும் வந்துவிட்டதோ என ஆச்சரியப்படத் தோன்றுகிறது.1 ஆட் சியில் அமர்ந்துள்ள நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி (அஓக) மேற்கு லகுக்கும் மேற்கத்திய சக்திகளுக்கும் அடிபணியாத விதத்தில் கொள்கை மாற்றங்கள் ஏற்படுத்தி வருகிறது; மக்கள் மத்தியில் பொங்கும் இஸ்லாமிய அலைக்கு சாதகமான சூழல் ஏற்படுத்தித் தந்து கொண்டிருக்கிறது. இந்த உயர்வுக்கும் உணர்வு அலைக்கும் பின்னணியில் பெரும்பங்காற்றிய சக்திகள் என்று பார்க்கப்படும் பிரதானமான ஒன்று, பதீயுஸ்ஸமான் சஈத் நூர்ஸியின் ரிஸாலா-யே நூர்.

1995இல் பதீயுஸ்ஸமான் குறித்து நடந்த மூன்றாம் சர்வதேச ஆய்வரங்கில் அன்றைய இஸ்தான்புல் மேயரும் இன்றைய துருக் கியின் பிரதமருமான ரஜப் தைய்யிப் எர்தோகான் இவ்வாறு கூறி னார்: “சஈத் நூர்ஸி இன்னும் தோண்டியெடுக்கப்படாத ஒரு புதை யல்…பதீயுஸ்ஸமான் இவ்வுலகிற்கு வந்த காலகட்டத்தில் நமது நிலைமை தலைகீழாக இருந்தது…பதீயுஸ்ஸமான் நம் சமூகத்தின் நோயை துல்லியமாகக் கண்டறிந்து, நமது விமோசனத்துக்கான மருந்து இறைநம்பிக்கையே என நம்பினார்… அந்த இறைநம்பிக் கையை சில விதங்களில் மறுவரையறைப்புச் செய்து வழங்கினார்… முஸ்லிம்களும் இஸ்லாமிய உலகும் காப்பாற்றப்பட வேண்டு மென்றால், அவர்களுடைய ஆன்மாக்களில் இறைநம்பிக்கையின் முழுமாற்ற மூச்சை மீண்டும் ஊத வேண்டும் எனக் கூறினார்.”

தனது வாலிப ஆற்றல் அனைத்தையும் கல்விக்கும் போராட் டத்துக்கும் சீர்திருத்தத்துக்கும் செலவழித்துவிட்ட பின்பும் துருக்கி சமூகம் சீர்மாற்றப் பாதைக்கு எதிர் திசையிலேயே செல்வதைக் கண்டார் பதீயுஸ்ஸமான். மக்களின் சிந்தையில் மேற்குலகு பற்றிய உயர்வெண்ணம் ஊடுருவிக்கொண்டே இருந்தது. அதன் அறிவு மற்றும் அறிவியல் மரபும் அது சார்ந்த நாத்திகமும் ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது. நம் பண்பாடு பற்றிய தாழ்வு மனப்பான்மை வளர்ந்துகொண்டே சென்றது. சன்மார்க்க உணர்வு அகன்ற வண் ணம் இருந்தது. இதற்கு முட்டுக்கொடுத்த கமாலிஸ அரசும் அதன் விரிவான எந்திரமும் இஸ்லாம் தலைதூக்குவதை அடக்கத் தேவை யான முறையமைப்புகளைக் கட்டியெழுப்பின. இறை சிந்தனைக் கான வெளிகளை அடைத்து மூச்சுத்திணறல் ஏற்படுத்தின. இந்தப் புயலை எதிர்கொண்டு திசைதிருப்ப பாரிய உழைப்பும் போராட்ட மும் தேவைப்பட்டது.

மறுபுறம், பதீயுஸ்ஸமானின் பேச்சு, கருத்துச் சுதந்திரம் ஆகி யவை பறிக்கப்பட்டன. பெரும்பாலும் வீட்டுக் காவலிலோ, கண்காணிப்பிலோ, சிறையிலோ அவர் வைக்கப்பட்டார். படிப்புச் சுதந்திரம் கூட பறிக்கப்பட்டது எனலாம். அவர் படித்த நூல்களும் அவருடைய வீட்டின் சாதக சூழலும் கூட எட்டாத தூரத்திலேயே அவர் வசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.3 இந்நிலையில் தான் அவரது மனதிலிருந்து ரிஸாலா-யே நூர் —ஒளியின் உரை—வெளிப்பட்டது. பதீயுஸ்ஸமான் தன் எழுத்துக்கள் மூலம் முழு பிரபஞ்சத்தையும் ஒரு விசாலமான புத்தகமாக மாற்றினார்.4 சந்தி ரன், சூரியன், காலம், மக்கள் சகலமும் ஓரிறைவனை சுட்டிக்காட் டும் அத்தாட்சிகளே எனக் காட்டினார். ரிஸாலா-யே நூரை வாசிப் பவர்கள் எங்கு நோக்கினாலும் எதைப் பார்த்தாலும் படித்தாலும் யோசித்தாலும் ஓரிறை நினைவு உண்டாகும் சிந்தனை உருவாகி யது. பொருளை உயர்த்தி இறை சிந்தனையை தாழ்த்தி இருள் உண்டாக்கும் நவீன அறிவியலை அவர் இலாவகமாகக் கையாண்டு அதை ஒளி உண்டாக்கப் பிரயோகித்தார்.

பதீயுஸ்ஸமானுடைய ரிஸாலா தொகுப்பை ஐந்து பகுதிகளாகக் குறிப்பிடலாம்: சஸ்லர் (வாக்குகள்), லெம்ஆலர் (மின்னல்கள்), ஷûஆலர் (ஒளிக்கதிர்கள்), மக்தூபாத்(கடிதங்கள்), இஷாராதுல் இஃஜாஸ் (அற்புதத்தன்மையின் அத்தாட்சிகள்). இந்தக் கடைசிப் படைப்பு, முன்பு முதல் உலகப் போரில் அவர் பங்கெடுத்தபோது யுத்த களத்திலேயே எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரிஸாலாவின் ஆக்கம் பெரும்பாலும் அவர் நாடு கடத்தப்பட்டு மலைகள், கிராமங்களில் இருந்தபோதே மேற்கொள்ளப்பட்டது. அவர் அதிவேகமாக மொழியும் வார்த்தைகளை அதே வேகத்தில் ஓர் எழுத்தர் பதிவு செய்வார். பிறகு, அவை கைப்பிரதிகள் செய்யப் பட்டு இரகசியமாக வலம் விடப்படும். ஏனெனில், அப்போதைய மதச்சார்பின்மை அரசு சமய நூல்கள் அனைத்தையும் தடை செய்தி ருந்தது. பிறகு, இக் கட்டுரைகள் ரிஸாலா-யே நூர் மாணவர்களால் ஊர் ஊராகக் கைமாற்றப்படும். இவ்வாறு வலம்வந்த கைப்பிரதி களின் எண்ணிக்கை அறுபதாயிரத்தை தொட்டது எனக் கூறப்படு கிறது. நகலாக்கம் மற்றும் அச்சு எந்திரங்கள் அவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த காலம் அது!

ரிஸாலா-யே நூர் சமூக மக்களின் சிந்தனையை ஓரிறை நினைப் பால் நிரப்பியதோடு இறைவன், மனிதன், சமூகம் குறித்தும் அது சார்ந்த வாழ்வின் கலாச்சார, சமூக, அரசியல் அம்சங்கள் குறித்தும் ஓரு குர்ஆனிய உலகநோக்கை (தீணிணூடூஞீ திடிஞுதீ) உண்டாக்கியது. மறைந்து போகும் இஸ்லாமிய மரபு வாழ்வில் இருந்த அர்த்தங்களை உள் வாங்கி, புதிதாக மாறிய உலகினில் அவற்றுக்கு புதுவடிவம் தந்து வழங்கியது. சமூக உறவுகள், உறவாடல்களுக்கு நடுவில் குர்ஆனை வைத்தது. இவ்வாறு ஓர் அக சமூக வெளியை (டிணணஞுணூ ஞிணிட்ட்தணடிtதூ) உருவாக்கி இறைநம்பிக்கை உளவியலை வளர்த்தது. அரசின் இரும்புக் கரத்தால் இந்த அகச் சமூகத்தை தீண்ட முடியவில்லை. பாங்கு சொல்வதையும், பர்தாவையும், மத்ரஸாக்களையும் சூஃபி தரீக்கத்துகளையும் தடைசெய்த அரசினால், இந்த அகவெளிக்குள் நுழைவுபெற முடியவில்லை. அவருக்குப் பிறகு நூர்ஜுக்களின் (ரிஸாலா-யே நூர் மாணவர்கள்) தெர்ஷான்கள் வாயிலாக இது பரவி வெள்ளம்போல் நாட்டையே ஆக்கிரமித்தது.

இந்த நவீனகால இஸ்லாமிய மறுமலர்ச்சி பற்றி தமிழ்கூறும் உலகில் அரிதாகவே அறியப்படுகிறது. இது தொடர்பான நூல் களும் தாள்களும் அவ்வளவாக வெளிவரவில்லை.8 இந்நிலையில், உலகின் பூலோக அரசியல் மையப்பகுதியிலும் பெருங்கண்டங் களான ஆசியா மற்றும் ஐரோப்பா சங்கமிக்கும் இடத்திலுள்ள துருக்கியின் இஸ்லாமியத் துடிப்பையும் அதன் வேர்களையும் அறிந்துகொள்வது நமது அத்தியாவசியக் கல்வியின் ஓர் அங்கம் என உணர்ந்து இந்த சிற்றாக்கத்தை வழங்குகிறோம். 1970களின் துவக் கத்தில் எழுதப்பட்ட இந்த ஆய்வுரை பதீயுஸ்ஸமானின் வாழ்வுக் கட்டங்களில் முக்கியமானவற்றை தொட்டுச் சென்று, அவருடைய வாழ்வின் கனியான ரிஸாலா-யே நூர் குறித்து சுருக்கமாகச் சித்த ரிக்கிறது. ஏறத்தாழ நான்கு தசாப்தங்களுக்கு முன்பு இயற்றப்பட் டதால் பல பிற்கால வளர்ச்சிகள், தாக்கங்கள் குறித்து இது செய்தி யளிப்பதில்லை. என்றபோதிலும், பதீயுஸ்ஸமானின் வாழ்வுக்கு நெருக்கமான காலகட்டத்தின் உயிரோட்டத்தை ஈர்த்து நம் முன் வெளிப்படுத்துகிறது. அந்த ரீதியில் இது பதீயுஸ்ஸமானின் வாழ்வு, பணிகள், சாதனை மற்றும் தாக்கம் குறித்து அறிவதற்கு நம்பகமான தொரு திறவுகோலாக அமைகிறது.

இந்நூலின் ஆசிரியருடைய தகைமையும் இதற்கு வலுவும் மெருகும் சேர்த்துள்ளது. ஹமீத் அல்கர் பெர்க்லீயில் உள்ள கலிஃ போர்னியா பல்கலையின் அண்மைக் கிழக்கு ஆய்வுத்துறைப் பேரா சிரியர். கடந்த 45 ஆண்டுகளாக இந்தப் பணியில் சேவையாற்றி வரும் அவர், துருக்கி மொழி (உஸ்மானிய துருக்கி மற்றும் நவீன துருக்கி) மற்றும் துருக்கிய நாடுகள் குறித்தும் ஃபார்ஸி மற்றும் ஈரான் குறித்தும் சிறப்பார்வ ஆராய்ச்சியாளர். குறிப்பாக, நக்ஷ்பந்தி சூஃபி வழியமைப்பு பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளார். அதை விட, ஈரானிய இஸ்லாமியப் புரட்சி குறித்து ஆழ்ந்த சிறப்பறிவு பெற்றுள்ளார். பதீயுஸ்ஸமான் சஈத் நூர்ஸியின் எழுத்தாக்கங்கள் சிலவற்றையும் வெவ்வேறு மொழிகளுக்கு மொழி பெயர்த்துள் ளார். மற்றும், பதீயுஸ்ஸமானின் வேறு சில அம்சங்களில் ஆய்வுத் தெளிவு மேற்கொண்டுள்ளார்.

இத்தகு தெளிவுரையை வழங்குவதில் மகிழ்ச்சிகொண்டுள்ள நாங்கள், இந்நூலில் வரும் துருக்கிச் சொற்களின் ஒலிபெயர்ப்பு குறித்தும் தகவலளிப்பது முக்கியம் என எண்ணுகிறோம். இதில் சில அரபிச் சொற்கள் வித்தியாசமாக எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். அசலில் அவை துருக்கி வழக்கில் உள்ளபடி கட்டுரை யில் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சில: பெதீயுஸ்ஸமான் (பதீயுஸ் ஸமான்), மெத்ரஸெ (மத்ரஸா), ஸெஹ்ரா (ஸஹ்ரா), எஹ்ல்-ஏ- மெக்தப் (அஹ்லுல் மக்தப்), ஷெய்ஹு (ஷெய்கு), ஷெரீஅத் (ஷரீஅத்), ஹிக்மெத்தில் இஸ்லாமிய்யே (ஹிக்மத்துல் இஸ்லா மிய்யா). துருக்கி மொழியில் வரும் பெயர்கள், இடங்கள் முதலான வற்றுக்கு இயன்றவரை பிரத்யேக துருக்கி ஒலிபெயர்ப்பைப் பயன்படுத்தியுள்ளோம். துருக்கி மற்றும் பதீயுஸ்ஸமானின் செல் வாக்கு வளர்ந்து விரிந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அந்தச் செய்தியை தமிழ்கூறும் உலகிற்கு முன்னெடுத்துச் செல் வதில் இந்நூல் வெற்றிப் பங்களிக்கும் என நம்புகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *