மூன்று முஜாஹிதுகள் – மரியம் ஜமீலா
Posted on…இவர்கள் எதிர்ப்புப் போராட்டம் செய்திருக்காவிட்டால் முஸ்லிம் உள்ளங்களிலிருந்து சுதந்திரத் தீ நிரந்தரமாய் அணைந்து போயிருக்கும்.
– ஐ.எச். குரைஷி, பிரபல வரலாற்றாசிரியர்
முஸ்லிம் நாகரிகத்தின் சரிவுகால வரலாற்றில் கி.பி.19-ம் நூற் றாண்டு ஓர் ஒளிமயமான இடைவேளை எனலாம். கிழக்கே பிலிப் பைன்ஸ் முதல் மேற்கே மொராக்கோ வரை பற்பல இயக்கங்கள் உருவெடுத்தன. இவை இஸ்லாமிய விழுமானங்களுக்குப் புத்துயி ரூட்டி அவற்றைச் சமூகத்தின் வாழ்வாக வடிவளிக்க இயன்ற சகல வழிகளிலும் பாடுபட்டன.
குறிப்பாக, இஸ்லாமிய விழுமானங்களின் மையமாக விளங்கும் இறைவனை அன்றி வேறு சக்திகளுக்குக் கீழ்ப்படிய மறுத்தல் எனும் கோட்பாட்டுக்கு உன்னதமான உயிர் வடிவங்கொடுத்தனர். முஸ்லிம் உலகைத் தங்களது பீரங்கிப் படைகளாலும் வஞ்சகங்களாலும் தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டே வந்த ஐரோப்பிய ஆதிக்க சக் திகளின் -ஆங்கிலேய, ரஷ்ய, பிரெஞ்சு, இத்தாலியர்களின்— இரா ணுவப் பேராற்றலை எதிர்த்து அந்த முஜாஹிதுகள் போராடினர்.
நவீன ரக துப்பாக்கிகளும், ஆயுதங்களும், டேங்குகளும், பல- கலை நிபுணர்களும் கொண்ட; சீருடையணிந்த தளபதிகள் வழிநடத் தும் பட்டாள வெள்ளத்தை வெறும் குதிரைகளையும், பிடிபட்ட ஆயுதங்களையும், பஞ்சத்திலும் பற்றாக்குறையிலும் உழன்றிருந்த மக்களையும் கொண்டே தடுப்புப் போரை (ணூஞுண்டிண்tச்ணஞிஞு) ஒருங்கமைப் பது எப்படி? தொய்வு விழ அனுமதியாமல் அதைத் தொடருவது எப் படி? என்பதைக் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.
இந்நூல், அன்னை மரியம் ஜமீலாவினது இஸ்லாம் : கொள்கையும் நடைமுறையும் (Islam in Theory and Practice) எனும் நூலின் இரண்டாம் பகுதியான நடைமுறையில் உள்ள சில அத்தியாயங்களின் தமிழாக் கம் ஆகும். எனவேதான், இதில் இடம்பெற்றுள்ள வர்ணனை வர லாற்றுப் பாங்கிலோ அல்லது கதை வடிவிலோ அமையாமல், தொட ரறுந்த நிகழ்வுகளின் தொகுப்பு போல் தோன்றுகிறது. எனினும், ஆசிரியரது மேற்சொன்ன நூலின் ஒரு பகுதியாகக் கருதி, இஸ்லாமிய கொள்கைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி இதை வாசிப்போர், நிச்சயமாக இஸ்லாமிய விழுமானங்கள் இச்சரித்திரங்களில் உயிர் பெற்றெழுவதை உணர முடியும்.