ஃபலஸ்தீனும் அதற்கு அப்பாலும்: அடுத்து என்ன? – டாக்டர் ஸஃபர் பங்காஷ்

Posted on

♣ ♣ ♣ ♣ ♣

YouTube link: Wither Palestine And Beyond

உரையாற்றிய நாள்: 21-12-24

முகப்பு படம்: வடக்கு காசாவில் அழிக்கப்பட்ட கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குனர் ஹுசாம் அபூ சஃபியா தன் சக மருத்துவர்களுடன். தற்போது இஸ்ரேலின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.

♣ ♣ ♣ ♣ ♣

உலகளாவிய விவகாரங்கள் தொடர்பான கிரசன்ட் இன்டெர்நேஷனல்ICIT-ன் மற்றொரு அத்தியாயம் ஆகும்.

அனைவரின் கவனமும் சிரியாவில் குவிந்திருக்க, சியோனிச கொலை இயந்திரம் காஸாவில் தனது இனப்படுகொலை கொள்கையை தொடர்ந்து நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும், சியோனிஸ்டுகள் 200-க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனர்களை கொன்றுள்ளனர். ஆனால் சி.என்.என். அல்லது பி.பி.சி.இல் இச்செய்திகளை காணலாம் என்று எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் பஷர் அல் அசத் கவிழ்க்கப்பட்டதை கொண்டாடுவதில் மிகவும் மும்முரமாய் உள்ளனர்.

டிசம்பர் 21-ம் தேதி சியோனிச ஆக்கிரமிப்புப் படைகள் வடக்கு காஸாவில், ஏற்கனவே முற்றுகையிடப்பட்ட கமால் அத்வான் மருத்துவமனையில் மென்மேலும் தாக்குதல் நடத்தினர். மக்களை தாக்குவதற்கு ட்ரோன்கள் மற்றும் டாங்கிகளை பயன்படுத்தினர். காயமடைந்த குழந்தைகளுடன் மருத்துவமனையில் இருக்கும் குடும்பங்களை வெளியேறச் சொல்லி உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் எங்குதான் செல்ல முடியும்?அவர்கள் எங்கு நகர்வதற்கு சொல்லப்பட்டார்களோ அங்கும் கூட சியோனிஸ்டுகள் அவர்களை குறி வைக்கின்றனர்.

இஸ்ரேலால் அழிக்கப்பட்ட கமால் அத்வான் மருத்துவமனை

டிசம்பர் 21-ம் தேதி, குறைந்தது 25 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அக்டோபர் 8, 2023 முதல் இன்று வரை அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணக்கை 45,000-க்கும் அதிகமாக உள்ளது. எனினும் அசல் எண்ணிக்கை நிச்சயம் மிக அதிகமாக இருக்கும். அநேகமாக 2,00,000 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கிறது.

சிறுவர்கள் உட்பட 25 ஃபலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்று குவித்த போது “இது ஒரு கொடூரம்! போர் அல்ல!” என்று போப் ஃபிரான்ஸிஸ் தனது கிறிஸ்துமஸ் உரையில் கண்டனம் தெரிவித்தார். இதைக் கேட்டதும் இனப்படுகொலை புகழ் சியோனிஸ்டுகள் வெறித்தனம் அடைந்தனர்.“என்ன தைரியம் இருந்தால் எங்களுக்கு கண்டனம் தெரிவிப்பீர்?” என்று கேட்டது இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சகம்.

போப் ஃபிரான்ஸிஸ்

சிறுவர்கள், பச்சிளம் குழந்தைகள் உட்பட ஃபலஸ்தீனர்களை விரும்பிய அளவு விரும்பியவாறு கொல்வதற்கு தங்களுக்கு உரிமை உண்டு என்று சியோனிஸ்டுகள் வலியுறித்துகின்றனர். “அவர்கள் வளர்ந்து பயங்கரவாதிகளாகிவிடுவர். எனவே அவர்களை இப்போதே கொன்றுவிடுவது நல்லது” என்று சியோனிஸ்டுகள் கூறுகின்றனர்.

அல் காயிதாவின் பகர அமைப்புகள் மூலம் சிரியாவை எதிர்ப்பு அச்சிலிருந்து (resistance axis) நீக்கிய பிறகு சியோனிஸ்டுகளின் திட்டம் பின்வருமாறு உள்ளது: வடக்கு காஸாவில் உள்ள அனைத்து ஃபலஸ்தீனர்களையும் —பட்டினி போட்டும்— அவர்கள் கொன்று விடுவார்கள். அக்டோபர் முதல் வடக்கு காஸாவிற்கு உணவு விநியோகிக்கும் முயற்சிகளை இஸ்ரேல் 97% மறுத்துள்ளது அல்லது தடைசெய்துள்ளது என்று ஐ.நா வின் உலக உணவு அமைப்பு கூறுகிறது.

காஸா

தெற்கில், ஃபலஸ்தீனர்கள் சினாய் தீபகற்பத்திற்கு விரட்டப்படுவார்கள். மேற்குக் கரையில் உள்ள ஃபலஸ்தீனர்கள் ஜோர்டனுக்கு தள்ளப்படுவார்கள். சியோனிஸ்டுகள் அல் அக்ஸா பள்ளிவாசலை ஆக்கிரமித்து, அதை அழித்து, அங்கு தங்களின் புராண மூன்றாவது கோயிலை கட்டுவார்கள். வெறிபிடித்த சியோனிஸ்டுகள் இதை வெளிப்படையாகவே சொல்லியுள்ளனர்.

ஜோர்டனிய மன்னர் உட்பட துரோகிகளான அரேபிய அரசர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கைப்பாவைகள் ஆவர். இருப்பினும், அவர்களின்  முறையற்ற ராஜியங்கள் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்படுவதை தவிர்க்கப் போவதில்லை. ஜோர்டன் ஃபலஸ்தீனத்தில் இருந்தும், லெபனான் சிரியாவில் இருந்தும் பிரித்து உருவாக்கப்பட்டன.

அகண்ட இஸ்ரேல் திட்டம் வெற்றிப் பாதையில் இருக்கிறது. ஒட்டுமொத்த ஃபலஸ்தீனும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; சிரியா கிட்டத்தட்ட மறைந்துவிட்டது; சவூதி அரேபியாவின் பெரும் பகுதிகள், ஜோர்டன் மற்றும் எகிப்தும் விழுங்கப்பட்டுவிடும்.அடுத்து சியோனிஸ்டுகள் ஈராக்கின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்புவார்கள். யூப்ரடீஸ் நதி வரை ஆக்கிரமிப்பர்கள். யூப்ரடீஸில் இருந்து நைல் வரையிலான அகண்ட இஸ்ரேல் திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து அவர்களை தடுப்பதற்கு என்ன இருக்கிறது?

சியோனிஸ்டுகளின் உச்சபட்ச நோக்கம் இஸ்லாமிய ஈரானை அழிப்பதாகும். ஆனால் அதை அவர்களுக்காக அமெரிக்கா செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த குற்ற சதித்திட்டத்தில் அமெரிக்கா இணையுமா அல்லது வாஷிங்டனில் நல்லுணர்வு மேலோங்குமா? அமெரிக்க போர் வெறியர்கள் பகுத்தறிவுடன் நடந்துக்கொள்வார்கள் என்று நாம் நம்பமுடியாது. உண்மையில் போர்கள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நல்லதாக இருக்கும்.

சில்லரை சட்டவியல் (ஃபிக்ஹ்) பிரச்சனைகளில் முஸ்லிம்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நமது எதிரிகள் நம்மை துண்டுதுண்டாக அழிக்கிறார்கள்.யாருக்கும் இங்கு பாதுகாப்பு இல்லை. ஜோர்டனியர்கள், சவூதிகள், அமீரகத்தினர் உட்பட. வருந்ததக்க விதமாக, இவர்களுக்கு உணர்ச்சியோ கண்ணியமோ இல்லை. பாவம் முஸ்லிம்கள்.

♣ ♣ ♣ ♣ ♣

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *