தவ்ஹீதின் எதார்த்த நிலை – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி
Posted onஇறை நம்பிக்கை இஸ்லாமிய வாழ்வின் அடிப்படை. ஏகத்துவம் என்பது இஸ்லாம் காட்டும் இறைநம்பிக்கையின் சாராம்சம். இறை வன், அவன் பண்புகளில், செயல்களில் ஏகன், தனித்தவன், ஒப்பற் றவன் என்ற கருத்தே இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இறை நம்பிக்கை ஆகும். இப்பிரபஞ்சத்தை ஆளும் சக்தி ஒன்றுள்ளது என மொட்டையாக நம்புவது, மங்கலாக, தெளிவற்று ஏற்றுக்கொள்வது இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் இறைநம்பிக்கையாகாது. அவ்வாறே இறைவனைப் படைப்பினங்களோடு ஒப்பிட்டு அவனுக்கு படைப்பின் உருக்கொடுப்பதும் இஸ்லாத்தில் அலங்கரிக்கத்தக்க இறைநம்பிக்கையாகாது.
மனிதனின் சமூக வாழ்வோடு தொடர்பின்றி பௌதீக உலகை மட்டும் ஆளும் சக்தியாக இறைவனைக் காட்டுவதும் இஸ்லாமிய இறை நம்பிக்கையாகாது. இந்த வகையில்தான் இறைநம்பிக்கை இஸ்லாத்தில் தனிச் சிறப்பான கொள்கையாகிறது. ஏகத்துவம் அந்த இறைநம்பிக்கை யை விளக்குவதாகவும் அமைகிறது. எனவே, அதன் பொருளைப் புரிந்துகொள்ளல் அதிமுக்கியத்துவம் பெறுகிறது. அதனைப் புரிந்து கொள்ளும் போது மட்டுமே ஒருவர் சரியான இறைநம்பிக்கை கொண்டவராக மாறுகிறார். இத்தொடரில் ஏகத்துவத்திற்கு எதிரான இணைவைத்தல் என்பது யாது? அதன் பல்வேறு வடிவங்கள் யாவை, என்பதைப் புரிந்து கொள்ளலும் அவசியமாகிறது.
டாக்டர் யூஸுஃப் அல் கர்ளாவி அவர்களின் இச்சிறு நூல் எளிமை யாக ஆதாரபூர்வமாக ஏகத்துவம் என்பதின் பொருளை விளக்குகிறது. தத்துவ சர்ச்சைகளிலிருந்தும் கோட்பாட்டு கலைச் சொற்பிரயோகங் களிலிருந்தும் விலகி ஒரு சராசரி வாசகருக்கும் விளங்கத்தக்க வகையில் அமைந்துள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும்.