‘இஸ்லாமிய நாட்காட்டி 1443’ இன் அறிவியல்

Posted on

பிறையின் உதயம்-மறைவு, பிறை உதயமாகி மறைவதற்கும் சூரியன் உதயமாகி மறைவதற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள், பிறை தொடக்கம் / பிறையின் வயது, பிறையின் ஒளி போன்றவற்றை படங்களுடன் விளக்கி மாதங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. அத்துடன் ஹிஜ்ரி கமிட்டியினர் செய்யும் குழப்பத்திற்கான காரணத்தையும் தெளிவுபடுத்துகிறது.


ஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 3) – சையித் குதுப்

Posted on

மரணம் இப்போது வந்தாலும் நான் திடுக்கிட மாட்டேன். என்னால் செய்யமுடிந்த அளவுக்கு செய்திருக்கிறேன். ஆயுள் நீடித்தால் நான் செய்ய ஆசைப்படுகின்ற பல விடயங்கள் உண்டு. அவை முடியாமற் போனாலும் கவலை என் உள்ளத்தை அரிக்கப் போவதில்லை. அடுத்தவர்கள் நிச்சயமாய் அவற்றை செய்வார்கள். நிலைத்து நிற்கத் தகுதிபெற்றிருந்தால், என்றுமே அவற்றுக்கு மரணமில்லை. இப்பிரபஞ்சத்தை அவதானித்துக் கொண்டிருக்கும் அந்த தெய்வீகக் கண்காணிப்பு, ஒரு நல்ல சிந்தனையை சாகவிடாது என்ற திருப்தி எனக்கிருக்கிறது.


ஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்

Posted on

உண்மைகளை விளங்கிக் கொள்ளல், உண்மைகளை அடைந்து கொள்ளல் ஆகிய இரண்டுக்குமிடையிலான வேறுபாடு மிகப் பெரியது. முதல் வகை அறிவு. இரண்டாவது வகை ஞானம்.
முதலாவதில் வார்த்தைகளோடும் வெறும் பொருள்களோடும் அல்லது அனுபவங்களோடும் துண்டுதுண்டான பெறுபேறுகளோடுமே உறவாடுகிறோம். இரண்டாவதிலோ உயிர் ததும்பும் விளைவுகளோடும் முழுமையான முடிவுகளோடும் உறவாடுகிறோம்.


ஆத்ம ஆனந்தங்கள் – சையித் குதுப்

Posted on

விரிந்த ஆன்மாவோடு, தவறையும் பலவீனத்தையும் கண்டு இரங்குகின்ற கனிவோடு அடுத்த மனிதர்களோடு பழகுவதும் அவர்களை கவனிப்பதுமே உண்மையான பெருந்தன்மையாகும். அவர்களை பண்படுத்தி, தூய்மைப்படுத்தி, முடிந்த அளவு நம் கருத்துக்கு உயர்த்துவதற்கான போலியற்ற விருப்பத்தை அதுவே பிரதிபலிக்கிறது. இதன் பொருள் எம் உயர்ந்த பெறுமானங்கள், இலட்சியங்கள் ஆகியவற்றிலிருந்து விலகிவிடுவதோ, அல்லது அடுத்த மனிதர்களோடு முகஸ்துதி பாராட்டி அவர்களது துர்க்குணங்களை புகழ்வதோ, அல்லது அவர்களை விட நாம் உயர்ந்து நிற்பவர்கள் என்று உணரச்செய்வதோ அன்று.